செவ்வாய் - சனி இணைவினால் ஜூன் முழுவதும் சிக்கலை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
)
தற்போது செவ்வாய், ராசியில் சனியிலிருந்து ஆறாமிடத்தில் இருக்கிறார். சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் இந்த நிலை ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. ஷடாஷ்டக யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. செவ்வாய் ஜூன் 30 வரை கடக ராசியில் இருக்கப் போகும் நிலையில், நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
)
செவ்வாய் மற்றும் சனி நிலையினால் ஏற்படும் அசுப யோகத்தினால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். பொருளாதார அம்சங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து வேலை செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், சிறிது நேரம் ஒத்தி போடுங்கள். ஜூன் 30 வரை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.
)
செவ்வாய் மற்றும் சனி நிலையினால் ஏற்படும் அசுப யோகத்தினால் சிம்ம ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பணியிடத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் நீங்கள் சில சர்ச்சைகளில் சிக்கலாம். பொருளாதார நிலை வலுவழிக்க கூடும். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நிதி நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
செவ்வாய் மற்றும் சனி நிலையினால் ஏற்படும் அசுப யோகத்தினால் தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களையே தரும். இந்த நேரத்தில், உங்களுக்கு நெருக்கமானவர்களால் கூட பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களால் ஏமாற்றப்படலாம். உங்களின் சொந்தங்களில் சிலர் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். எனவே எதை செய்தாலும் மிகவும் கவனமாக இருக்கவும்.
செவ்வாய் மற்றும் சனி நிலையினால் ஏற்படும் அசுப யோகத்தினால் கும்ப ராசிக்காரர்கள் வாகனம் போன்றவற்றை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பயணத்தின் போது நீங்கள் காயமடையலாம். இந்த நேரத்தில், உங்கள் வேலையை முழு கவனத்துடனும் நிதானத்துடனும் செய்யுங்கள். வேலை சம்பந்தமாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். மனஅழுத்தம் உங்கள் செயல் திறனை பாதிக்க அனுமதிக்காதீர்கள், இல்லையெனில் உங்களுக்குப் பிரச்சனை வரலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.