Astro: உதயமாகும் சனி பகவான் ‘இந்த’ ராசிகளுக்கு அள்ளிக் கொடுப்பார்...!
)
சனி பகவான் 2024 பிப்ரவரி 17, அன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகி, 2024 மார்ச் 25 அன்று உதயமாகிறார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், சனிபகவானின் உதயத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு பல ஆண்டுகளாக தடைபட்ட வேலைகள் கைகூடும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த சூழல் இருக்கும். சனியின் சுப பலன்களால் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
)
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி உதயமாகும் போது மிகுந்த பலன் அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரலாம். போட்டிக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த சூழல் நிலவும். நண்பரின் உதவியால் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் விலகும்.
தனுசு ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் உதயமாகும் சனியினால் நன்மைகளைப் பெறலாம். உங்கள் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடன், உங்கள் வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். நிதி பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.