30 நாட்களுக்குப் பிறகு கும்பத்தில் சனி உதயம், இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
சனி உதயம் விளைவு 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17 கும்ப ராசியில் சனி பகவான் பெயர்ச்சியானார். பிறகு 30 ஆம் தேதி அஸ்தமனமானார். தற்போது மார்ச் 6 ஆம் தேதி சனி மீண்டும் கும்பத்தில் உதயமாகயுள்ளார், இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார்.
ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவி உண்டாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இக்காலகட்டத்தில் வெற்றி கிட்டும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும், பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி: பண யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வேலையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதே சமயம் தொழிலதிபர்களும் லாபம் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல மகிழ்ச்சிகள் வந்து சேரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்ப ராசி: சனி உதயத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.