Eastern Hognose Snake: இந்த பாம்பின் ஆயுதம் விஷம் அல்ல... துர்நாற்றம்

Mon, 18 Apr 2022-2:32 pm,

இந்த பாம்பு 'பஃப் ஸ்னேக்' என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்டர்ன் ஹாக்னோஸ் பாம்பின் மிகப்பெரிய ஆயுதம், பாதிக்கப்பட்டவரை அதன் விஷத்தால் கொல்வதல்ல, துர்நாற்றத்தை பரவ விட்டு அங்கிருந்து தப்பிப்பதுதான்.

இந்த பாம்பு 20 முதல் 30 அங்குலம் வரை நீளமாக இருக்கும். இந்த பாம்பு  சிறிய பறவைகளை வேட்டையாடுகிறது. பிற பெரிய பாம்புகள் மற்றும் விலங்குகளை விரட்ட, இந்த பாம்பு துர்நாற்றத்தை பரவ விடுகிறது.

இந்த பாம்பின்  தடிமனான உடலின் முடிவில் பெரிய முக்கோண வடிவ தலையை வைத்து இந்த குறிப்பிட்ட இனத்தின் பாம்பு அடையாளம் காண முடியும். பெண் பாம்புகள் ஆண்களை விட நீளமானவை. விஞ்ஞானிகளுக்கு அதன் ஆயுட்காலம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை என்றாலும், அது 11 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று நம்பப்படுகிறது.

Eastern hognose பாம்புகள் விஷமுள்ள தேரைகளையும் சாப்பிடும். இந்த பாம்புகளின் விஷத்தால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவற்றின் உமிழ்நீர் சுரப்பிகள் தவளைகளையும் சிறிய விலங்குகளையும் கொல்லக்கூடிய லேசான விஷத்தையும் வெளியிடுகின்றன. ஆனால் அவை மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல.

Eastern hognose பாம்பு  ஒரு நாகப்பாம்பு போல அதன் கழுத்தையும் தோலையும் அதன் தலையில் விரித்து தாகுவதை போல் நடிக்கும்.  இது தவிர,  சில சமயங்களில் இந்த பாம்பு முற்றிலும் அசையாமல் இறந்ததை போல் நடிக்கும். மேலும் துர்நாற்றத்தை அப்ரவ விட்டும் தன்னை யாரும் நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link