ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க 7 ஈசியான வழிகள்! இனி வாலாட்டவே மாட்டார்கள்..
தலைகனம் பிடித்தவர்கள், பிறரின் கோபத்தை தூண்டி அவரை பர்சனல் ஆக தாக்க வேண்டும் என நினைப்பர். எனவே, அவர்கள் ஏதேனும் உங்களை தூண்டிவிடுமாறு பேசினால், அந்த நேரத்தில் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் இதற்கு ஏதேனும் ரியாக்ட் செய்தால் அது அவர்களின் ஈகோவிற்கு தீனி போடுவது போல இருக்கும்.
இப்படி தலைகனம் பிடித்த ஆளிடம் பேசுவது சரிதானா? இவரிடம் சண்டை போடுவதால் உங்களுக்கு என்ன பயன்? என்பதை யோசிக்க வேண்டும்.
ஈகோ பிடித்தவர்கள் பல சமயங்களில் நமக்கென்று இருக்கும் எல்லைகளை தாண்டுபவர்களாக இருப்பர். அப்படி அவர்கள் உங்களது எல்லைகளை தாண்டும் போது அதனை அவர்களுக்கு உணர்த்திவிட வேண்டும்.
ஈகோ பிடித்தவரிடம் நல்ல குணாதிசயங்கள் இருந்தால் அதையும் கவனிக்க வேண்டியது உங்கள் கடமை. அவருடன் நல்ல உறவை பேண விரும்பினால் கண்டிப்பாக அவரது நல்ல குணாதிசயங்களை மட்டும் பாராட்டலாம்.
ஈகோ பிடித்த ஒருவர், உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏதேனும் கூறினால், அதை பர்சனல் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களின் அப்படிப்பட்ட குணமும் வார்த்தைகளும் அவர்கள் மனதில் இருக்கும் அழுக்கை காண்பிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அவர் உங்களிடம் கூறிய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருக்கிறது என்றால், அதை வெளிப்படுத்தும் போது “எனக்கு இப்படி இருந்தது, நான் இப்படி உணர்ந்தேன்..” என கூற வேண்டும். இது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும்.
ஈகோ பிடித்த ஒருவருடன் பேசுவது டாக்ஸிக் ஆக தோன்றும். எனவே, அவரிடம் தேவைப்பட்டால் மட்டும் பேச வேண்டும்.