எளிய முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி? ‘இந்த’ 5 பழங்களை சாப்பிட்டு பாருங்கள்!

Wed, 13 Dec 2023-3:49 pm,

உடல் பருமனோடு இருப்பது மட்டுமல்ல, வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் குறைந்த எடையுடன் இருப்பதும் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

எடை குறையாமல் இருப்பதற்கும், அதிகமாகாமல் இருப்பதற்கும் அந்தந்த நபரின் உடலே காரணம். எடையை குறைப்பது எந்த அளவிற்கு சிரமமோ, அதே அளவிற்கு அதை ஏற்றுவதும் சிரமம். சில ஹெல்தியான முறையை பின்பற்றினால் போதும், கண்டிப்பாக உடல் எடையை அதிகரிக்க முடியும். அதற்கு உதவும் பழங்கள், இதோ. 

மாம்பழம்: 

மாம்பழம், சுவை மிகுந்த பழங்களுள் ஒன்று. இந்த பழத்தில், காப்பர், வைட்டமின் இ, வைட்டபின் ஏ, வைட்டமின் ஈ போன்ற பல சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் ஃப்ருடோஸ் என்ற சத்தும் உள்ளது. இது, உடலில் கொழுப்பை சேர்க்க உதவும். எனவே, உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் தினமும் ஒரு கப் மாம்பழம் சாப்பிட்டால் 99 கலோரிகள் கூடும். 

வாழைப்பழம்:

திடமான தசை வேண்டுமென்று விரும்புபவர்கள், தினமும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஒரு வாழைப்பழத்தில் 119 கலோரிகள் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும், இதை நீங்கள் ஓட்ஸ், தயிர் போன்ற காலை உணவுகளிலும் கலந்து சாப்பிடலாம். 

தேங்காய்:

தேங்காயை பெரும்பாலான சமயங்களில் நாம் காய்கறி பயன்பாட்டிற்காக உபயோகிப்பதுண்டு. இதில் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளது. தினமும் 28 கிராம் தேங்காய் சாப்பிட்டால் உடலில் 99 கலோரிகள் ஏறுமாம். உடல் எடையை அதிகரிக்க ஆசைப்பட்டால் இது உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். 

உலர் பழங்கள்:

உடலுக்கு சத்து கொடுக்கவும், தேவையான ஆற்றலை அளிக்கவும் உலர் பழங்கள் நன்கு உதவி புரியும். இதில் சுவையூட்டப்படாத இனிப்பு கலந்துள்ளதால் உடலில் நல்ல கொழுப்புகளை சேர்க்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், தினம் தோறும் உலர் பழங்களை சாப்பிட வேண்டும். 

அவகேடோ:

அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் உடல் எடை தானாகவே ஹெல்தியான முறையில் ஏறும். ஒரு சாதாரன சைஸ் அவகேடோ பழத்தில் 162 கலோரிகள் உள்ளதாம். இதை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்வதால் உடலில் வைட்டமின் கே, சி மற்றும் பி5 ஆகியவை கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link