Weight Gain Tips: 10 நாளில் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்
சீஸில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்துள்ளன. உங்கள் உணவில் சீஸ் சேர்ப்பது சுவையை அதிகரிப்பதோடு தேவையான கலோரிகளையும் வழங்குகிறது.
உருளைக்கிழங்கு அதிக கலோரிகளை தருகின்றன. எனவே இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.
ப்ரோடீன் ஸ்மூத்திகளை குடிப்பது, உடல் எடையை திறம்பட அதிகரிக்கும் விரைவான வழியாகும். ஸ்மூத்தீஸ் அதிக அளவு புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் சுமார் 600 கலோரிகளை வழங்குகின்றன.
பீனட் பட்டர் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் இதில் அதிகளவில் புரதச்சத்து இருப்பதால் காலை உணவில் பீனட் பட்டரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாலில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் பாலை சேர்க்கவும்.
பன்னீர் என்பது ஒரு வகை சீஸ் ஆகும், இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது, ஆனால் அதிக புரதம் இதில் இருக்கிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க காலை உணவில் பன்னீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாதாம் ஒரு உலர் பழமாகும், இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே, நீங்கள் எடை அதிகரிக்க விரும்பினால், உங்கள் காலை உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ளுங்கள்.
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்ளலாம்.