அடிவயிற்று தொப்பையை குறைக்கணுமா? இரவில் இவற்றை மறக்காம சாப்பிடுங்க!
அதிகப்படியான தொப்பை கொழுப்பு நமது ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. ரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற சில நோய்களுக்கும் வழிவகுக்கும். இரவு உணவில் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
பாசி பருப்பு தால்
பாசிப்பருப்பு சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை இந்த பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடையை குறைப்பதோடு, வாயு பிரச்சனையும் நீங்கும்.
ஜவ்வரிசி கஞ்சி
உடலை குளிர்ச்சி அடைய வைப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. தினசரி இரவு உணவில் ஜவ்வரிசி கஞ்சியை உட்கொண்டால், உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம்.
பப்பாளி
இரவு அதிக உணவிற்கு பதில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்ல விஷயம். பப்பாளி வாயு, மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பப்பாளி உதவுகிறது.
சுரக்காய்
சுரைக்காயை இரவு உணவாக எடுத்துக்கொண்டு நம் உடல் இரவு குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். சுரைக்காயை சாப்பிடுவதால் நாம் உடலில் எண்ணற்ற ஆரோக்கிய சத்துக்கள் கிடைக்கும்.