இந்த உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்!
பிளாக் டீ அல்லது க்ரீன் டி தினமும் குடிப்பது உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கல்லீரல் ஆரோக்கியம். இது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு கேன்சர் செல்களையும் அளிக்கிறது.
திராட்சை பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யும் திறனை பெற்றுள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை அதிகம் உட்கொள்ளும்போது அது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் உடலுக்கும் பாதிப்பு ஏற்படாது.
தினசரி டயட்டில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது. குறிப்பிட்ட அளவு தினமும் ஈதனை அருந்துவது கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்க உதவுகிறது.
ப்ளூபெர்ரி, க்ரான்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.