தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்த இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெந்தயத்தில் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வெந்தயம் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, முடி உதிர்வதைத் தடுக்கும். பல ஆய்வுகள் உங்கள் தலைமுடியை தடிமனாக்குவதிலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அதன் செயல்திறனைக் கண்டறிந்துள்ளன.
முடி உதிர்வு ஏற்பட்டால் அல்லது முடி மெலிதாக இருந்தால் தேங்காய் எண்ணெயை சரியாக தடவினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேங்காய் எண்ணெய் முடியை பலப்படுத்துகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், பொடுகு பிரச்சனையை போக்குகிறது.
முடி வளர்ச்சியில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் முட்டையில் அதிகப்படியான புதர சக்தி உள்ளது, இவை மயிர்க்கால்களை பலப்படுத்த உதவுவதுடன், முடியின் ஆழமான சீரமைப்பையும் வழங்குகிறது.
வெங்காய சாற்றில் கந்தகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கு அவசியமான புரதமாகும். இதை முடியில் தொடர்ந்து பயன்படுத்துவது விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.