EPFO Alert: இதை செய்யவில்லை என்றால் ஊழியர்களுக்கு PF பணம் கிடைக்காது

Thu, 08 Jul 2021-6:54 pm,

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPF) சந்தாதாரர்களாக இருக்கும் அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.

முன்னதாக, 12 இலக்க ஆதாரை பான் கார்டுடனும் பிஎஃப் கணக்குகளுடனும் இணைக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) நிர்ணயித்த கடைசி தேதி ஜூன் 1, 2021 ஆக இருந்தது. இருப்பினும், இதற்கான கடைசி தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது. இது சந்தாதாரர்களுக்கு சிறிது ஓய்வை அளித்துள்ளது.

ஈ.பி.எஃப்.ஓ வழங்கிய உத்தரவின்படி, ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN-களுடன் ECR (electronic challan cum receipt or PF return) தாக்கல் செய்வதற்கான தேதி 2021 செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்காக ஜூன் 1 ம் தேதி ஈ.பி.எஃப்.ஓ அலுவலக உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆதார் எண் யு.ஏ.என் உடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதார் எண்களைக் கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே ஈ.சி.ஆர் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான கடைசி தேதி இப்போது செப்டம்பர் 1, 2021 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தொழிலாளர் அமைச்சகம் ஈபிஎஃப்ஒ சந்தாதாரர்களுக்கு ஆதார் அட்டைகளை பிஎஃப் கணக்குகளுடன் இணைப்பதை கட்டாயமாக்குமாறு ஈபிஎஃப்ஓவுக்கு உத்தரவிட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link