EPFO 3.0: PF பணத்தை எளிதாகப் பெற மத்திய அரசு முயற்சியில் EPFO கார்டு விரைவில் அறிமுகம்!!
லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பி. எஃப் கணக்கில் வைப்புத்தொகை செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெற ஒரு நீண்ட செயல்முறை பல வருடங்களாக இருந்து வருகிறது. பல நேரங்களில் தேவை ஏற்பட்டால் அதிலிருந்து பணத்தை எடுப்பதில் நிறையச் சிரமம் உள்ளது.
மக்கள் தங்கள் அவசரக் காலங்களில் கூட 3 முதல் 4 நாட்கள் காத்திருந்த பின்னரே தொகை பெறப்படுகிறார்கள் என்று பல குறைகள் எழுந்துள்ளது. இந்த குறைகள் எல்லாம் தீர்க்கும் விதமாக தற்போது மத்திய அரசு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மக்களின் நீண்ட நாள் குழப்பம் மற்றும் சிரமங்கள் விரைவில் சரிசெய்துவிடும் நேரமாக இது ஒரு நற்செய்தியாக அனைவருக்கும் அமைந்தது. இந்த வருடம் முடிவதற்குள் அரசாங்கம் EPFO தொடர்பான பல விதிகளைக் கணிசமாக மாற்றி வருவதை நாம் உணர்ந்திருப்போம்.
இந்தவகையில் மக்கள் தங்கள் PF பணத்திலிருந்து எடுக்க பல்வேறு நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் இருந்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் இதற்கு வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
EPFO தொடர்பாக அரசாங்கம் விரைவில் ஒரு பெரிய முடிவை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், EPFO 3.0 பதிப்பின் கீழ் PF பங்களிப்பு வரம்பை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசிலினை செய்து வருகின்றது.
மக்கள் தங்கள் PF பணத்தை எடுக்க EPFO திரும்பப் பெறும் அட்டையைக் கொண்டுவருவதைப் பற்றியும் மத்திய அரசு இதுகுறித்து பேசப்பட்டுவருகிறது. மக்கள் இந்த அட்டையை பெற்ற பின் நீங்கள் EPFO உறுப்பினர்களாக இருக்கும்பட்சத்தில் ATMலிருந்து நேரடியாக EPFO பணத்தை எடுக்க முடியும். இந்த புதிய விதி ஜூன் 2025 முதல் அமல்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
EPFo பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்குமாறு அரசு அமைப்புகள் இதுகுறித்து அரசாங்கத்திடம் கோருக்கை வைத்துள்ளனர். EPFo திரும்பப் பெறும் அட்டையைக் கொண்டு வருவது பரிசீலிக்கப்படுகிறது. தகவல்களின்படி, இந்த அட்டை ஏடிஎம் கார்டைப் போலவும் செயல்படும்.
இதனை அட்டையை ஏடிஎம் இயந்திரத்திலிருந்து மக்கள் பெறலாம். ஆனால் இதற்காக பணத்தை எடுக்க ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. இந்த வரம்பு உங்கள் வயதானக்காலத்திற்கு உதவியாக இருப்பதற்காக இந்த சேமிப்பு உங்கள் கணக்கில் வைக்கப்படும்.