PF கணக்கு உள்ளவர்களுக்கு 7 லட்சம் ரூபாய்: யாருக்கு, எப்படி கிடைக்கும்? விவரம் உள்ளே!!
முன்னதாக காப்பீட்டுத் தொகை ரூ .6 லட்சமாக இருந்தது. இதை தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையிலான ஈபிஎஃப்ஒ-வின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) 2020 செப்டம்பர் 9 அன்று ரூ .7 லட்சமாக உயர்த்தியது.
இந்த திட்டத்தின் கீழ், ஊழியரின் நோய், விபத்து அல்லது இயற்கையான மரணம் ஆகிய தருணங்களில் பணியாளர் ஊழியரின் நாமினி காப்பீட்டுத் தொகையை கோரலாம். அதாவது, கோவிட் -19 காரணமாக ஒரு ஊழியர் இறந்துவிட்டாலும், குடும்பம் EDLI இன் கீழ் ரூ .7 லட்சத்தை பெற முடியும். இறப்பதற்கு முன்னர் 12 மாதங்களுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பத்திற்கும் இந்த தொகை வழங்கப்படுகிறது. காப்பீட்டைக் கோருவதற்கான காலக்கெடுவை EPFO நிர்ணயிக்கவில்லை.
பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், இந்த தொகையை அவரது நாமினி கோரலாம். ஒரு ஊழியருக்கு எந்த நாமினியும் இல்லை என்றால், இந்த உரிமை அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் யாரையும் நாமினியாக பரிந்துரைக்கவில்லை என்றால், இறந்த ஊழியரின் மனைவி, அவரது திருமணமாகாத பெண்கள் மற்றும் மைனர் மகன்கள் ஆகியோர் இந்த தொகையை பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கு ஊழியர் எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது, இந்த காப்பீட்டுத் தொகை சந்தாதாரருக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது பிஎஃப் கணக்குடன் இணைக்கப்படுகிறது. கோவிட் -19 காரணமாக மரணம் ஏற்பட்டாலும் இந்த தொகையை பெற முடியும்.
பணியாளர் இறந்தவுடன், அவரது நாமினி இந்த தொகையை கோர, படிவம் -5 ஐஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதை ஊழியரின் முதலாளி சரிபார்த்து கொடுப்பார். முதலாளியை சந்திக்க முடியாமல் போனால், அந்த படிவத்தை கெஸட் அதிகாரி, மாஜிஸ்திரேட், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அல்லது மாவட்ட உள்ளூர் வாரியம் மூலம் சரிபார்க்கலாம்.