PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்
)
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் செய்யப்படும் நிதி பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. தற்போது, ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் மும்முரமாக பங்களித்து வருகின்றனர்.
)
இந்த நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் மட்டும், வீட்டு வசதிக்கான முன்தொகை, குழந்தைகளின் மெட்ரிக் படிப்பு, திருமணம், நோய்களுக்கான சிகிச்சை, ஓய்வூதியம், காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் என சுமார் 87 லட்சம் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
)
இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் வலுவான கணினி மென்பொருள் ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்துள்ளது. இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) இந்த நன்மைகளை ஆன்லைனில் கோருகின்றனர். யுனிவர்சல் அகவுண்ட் நம்பர் (UAN) உறுப்பினரின் தரவைச் சரிபார்க்கும் வலுவான கணினி மென்பொருள் பயன்பாட்டின் மூலம் இது சாத்தியமாகிறது.
EPFO இன் பதிவேடுகளில் உள்ள உறுப்பினர்களின் தரவுகளின் நிலைத்தன்மையானது ஆன்லைனில் தடையின்றி மற்றும் சரியான உறுப்பினருக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் தவறான நபருக்கு பணம் அனுப்பப்படுவது அல்லது மோசடி ஆபத்தைத் தவிர்க்கலாம்.
ஆகஸ்ட் 22, 2023 அன்று EPFO ஆல் வெளியிடப்பட்ட நிலையான இயக்க நடைமுறை (SOP) மூலம் உறுப்பினர்களின் ஃப்ரொஃபைலில் உள்ள தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இது இப்போது டிஜிட்டல் ஆன்லைன் பயன்முறையில் EPFO ஆல் இயக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பித்து இப்போது PF உறுப்பினர்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், திருமண நிலை, குடியுரிமை, ஆதார் போன்ற தகவல்களைப் புதுப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், உங்கள் கோரிக்கை தொடர்பான தேவையான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
பிஎஃப் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த நிறுனவங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள PF அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த விண்ணப்பங்களில் சுமார் 40,000 கோரிக்கைகள் ஏற்கனவே EPFO இன் பிராந்திய அலுவலகங்களால் தீர்க்கப்பட்டுள்ளதாக EPFO கூறியுள்ளது. இதுவரை EPFO சுமார் 2.75 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.