EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்துவது மிக எளிது... விபரம் இதோ
)
சமீபத்தில் EPFO உறுப்பினர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட விவரங்களை எளிமையான முறையில் அப்டேட் செய்ய முடியும் என்ற வகையில் விதிகளை மாற்றியுள்ளது.
)
EPFO அமைப்பில், பிஎஃப் கணக்கில், பதிவான தகவல்களில், பெயரில் உள்ள எழுத்துப் பிழை, பிறந்த தேதி, பாலினம், குடியுரிமை, பெற்றோர் பெயர், திருமண நிலை, வாழ்க்கைத் துணையின் பெயர், கணக்கில் சேர்ந்த தேதி உள்ளிட்ட பிற தனிப்பட்ட தகவல்களை எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உறுப்பினர்கள் எளிதாக திருத்தலாம்.
)
ஆதார் எண்ணுடன் யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று EPFO தெரிவித்துள்ளது. விதிகளை புதுப்பித்ததன் நோக்கம் புகார்களைக் குறைப்பதும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை விரைவுபடுத்துவதும் ஆகும்.
முன்னதாக, பிஎஃப் கணக்கில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு முதலாளியிடமிருந்து சரிபார்ப்பு தேவைப்பட்டது, இது சுமார் 28 நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் புகார்களில் சுமார் 27 சதவீதம் சுயவிவரம் மற்றும் KYC சிக்கல்கள் தொடர்பானவை. புதிய செயல்முறை இந்த புகார்களை கணிசமாகக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
சுயவிவர மாற்றங்களுக்கு, முதலில் EPAO போர்ட்டலுக்கு (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) சென்று, உங்கள் UAN யுனிவர்சல் கணக்கு எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு உள்நுழையவும்.
உள்நுழைந்த பிறகு, மேலே உள்ள 'Manage' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்ற தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க வேண்டுமானால், 'Modify Basic Details' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஆதார் அட்டையின் அடிப்படையில், தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும். EPF மற்றும் ஆதாரில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துணை ஆவணங்களை (ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்றவை) பதிவேற்றவும்.