EPFO வைப்பு நிதி உங்கள் அருகில்: தமிழ்நாட்டில் நவம்பர் 28ம் தேதி சிறப்பு முகாம்!
'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கிறது.
தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க இந்த சிறப்பு முகாம் உதவி செய்யும்.
நவம்பர் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும். சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்த்தில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலக வளாகத்தில் வைப்பு நிதி உங்கள் அருகில் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சின்ன ஓபுலாபுரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஷரோன் பிளை நிறுவன வளாகத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மறைமலைநகர் யூகால் பியூல் சிஸ்டெம்ஸ் லிமிடெட் அலுவலகத்திலும், வேலூர் மாவட்டத்துக்கு காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள குளுனி கான்வென்டிலும் சிறப்பு முகாம் நடைபெறும்
காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு மணிமங்கலம் முடிச்சூர் சாலையில் உள்ள டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கலவாய் ஜி.பி.நகர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஆம்பூர் பிளெஸ்ஸோ மெட்ரிக் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
புதுச்சேரி மாவட்டத்துக்கு பக்கமுடியான்பேட்டை இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனத்திலும், காரைக்கால் மாவட்டத்துக்கு காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் கிளை அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.