EPFO Rules: PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா... சரிசெய்வது எப்படி...
)
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை EPFO கவனிக்கிறது. நிறுவனத்தில் பணிபுரிவர்கள், பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை, ஓய்வு பெற்ற பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் போதும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காக பணத்தை எடுக்கலாம்.
)
நீங்கள் வேலை செய்யும் போது, உங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும். தவிர, உங்கள் நிறுவனமும் அதே அளவு பணத்தை உங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது.
)
உங்கள் பிறந்த தேதிக்கும் (Date of Birth) பிஎஃப் கணக்கில் உள்ள தேதிக்கும் வித்தியாசம் 3 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், நீங்கள் EPFO யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் ஆதார் அல்லது இ-ஆதாரைச் (e-Aadhaar) சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் வித்தியாசம் 3 வருடங்களுக்கும் மேலாக இருந்தால், -ஆதாருடன் தனியாக ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
PF கணக்கைத் திறக்கும்போது, நீங்கள் பல தகவல்களை வழங்க வேண்டும், அதில் ஒன்று உங்கள் பிறந்த தேதி, ஆனால் சில காரணங்களால் உங்கள் PF கணக்கில் தவறான பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதை நீங்கள் சரிசெய்ய வேண்டியது அவசியம். விதிகள் கூறுவது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்...
விதிகள் மற்றும் ஆவணங்கள்: உங்கள் PF கணக்கில் தவறான பிறந்த தேதி இருந்தால், அதனை சரி செய்ய, உங்கள் ஆதார் அட்டை, பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், மத்திய அல்லது மாநில அரசின் மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
பிறந்த தேதியை ஆன்லைனில் சரிசெய்யும் முறை: உங்கள் PF கணக்கில் உங்கள் பிறந்த தேதி தவறாகப் பதிவிடப்பட்டிருந்தால், அதைச் சரி செய்ய, முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளமான unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குச் செல்ல வேண்டும்.
இங்கே உங்கள் கணக்கில் லாக் இன் செய்து 'Manage' பகுதிக்குச் சென்று 'Basic Details' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கில் பதிவான தவறான பிறந்த தேதியையும் பின்னர் சரியான பிறந்த தேதியையும் உள்ளிடுவதற்கான விருப்பம் இருக்கும்.
DD MM YY என்ற வழிமுறையில் உங்களின் புதிய பிறந்த தேதியை நிரப்பி தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை இங்கே நிரப்பவும். பின்னர் அப்டேட் என்பதைக் கிளிக் செய்து, அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பிறந்த தேதி புதுப்பிக்கப்படும்.