PF கணக்குகள், ஓய்வூதியம், TDS... நேரலை அமர்வில் முக்கிய அப்டேட்களை அளித்த EPFO

Wed, 14 Aug 2024-10:30 am,

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஆகஸ்ட் 13 2024 அன்று "ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பரிமாற்றம்" என்ற தலைப்பில் அதன் 5வது நேரலை (லைவ்) உரையாடல் அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நேரலை அமர்வை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் 25,000 -க்கும் அதிகமானோர் பார்த்தனர். 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தலைமை அலுவலகத்தின் நிபுணர் பேச்சாளர் சனத் குமார், RPFC-I, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பரிமாற்றத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவாக விளக்கினார். இந்த அமர்வு RPFC-I அலோக் யாதவ் மூலம் நடத்தப்பட்டது. 

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இபிஎஃப்ஓ அதிகாரிகள் விரிவாக பதிலளித்தனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய சனத் குமார், வெவ்வேறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம், உறுப்பினர்களுக்கு தனித்தனியாக முன்பணம்/பகுதியளவு தொகைய எடுக்கும் வசதி கிடைப்பதுடன் TDS -ஐ தவிர்க்கவும் ஓய்வூதியம் பெறவும் வழி கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை மாற்றுவதற்கான நடைமுறைகளையும் அவர் விளக்கினார். இந்த தகவல்கள் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன.

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே தகவல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குவதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட இந்த நேரலை அமர்வு இப்போது (https://www.youtube.com/watch?v=CqBIJ6LQa8c) என்ற லிங்கில் கிடைக்கிறது. 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பலன்கள், சேவைகள் மற்றும் செயல்முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள, சாதாரண பொதுமக்கள்  உட்பட இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members), 13 ஆம் தேதி நடந்த அமர்வையும் முந்தைய நேரலை அமர்வுகளையும் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய் கிழமை EPFO -வின் நேரலை அமர்வுகள் நடைபெறும். முதல் அமர்வு 14 மே 2024 அன்று நடைபெற்றது. அடுத்த நேரடி அமர்வு செப்டம்பர் 10, 2024 அன்று நடைபெறும். இந்த அமர்வுகளின் தலைப்பு 3 செப்டம்பர் 2024 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சமூக ஊடக கணக்குகளில் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

இபிஎஃப்ஓ, இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) நன்மை மற்றும் வசதிகளை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பழைய விதிகளில் திருத்தங்களை செய்கிறது. இது குறித்த தகவல்களை பிஎஃப் உறுப்பினர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link