பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்

Wed, 04 Dec 2024-4:03 pm,

ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ESIC எனப்படும் ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Employees State Insurance Corporation) ஆகியவற்றின் கீழ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குறைந்தபட்ச ஊதிய உச்சவரம்பை இரட்டிப்பாக்க, அதாவது 15,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

EPF-ESIC வரம்பிற்குள் அதிக ஊழியர்களை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். அரசாங்கத்தின் இந்த முடிவின் காரணமாக, சுமார் 1 கோடி புதிய ஊழியர்கள் EPF-ESIC இன் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் சேர்க்கப்படுவார்கள்.

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து EPF-ESIC தொகையை பிடித்தம் செய்வதற்கான ஊதிய வரம்பு கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது, இந்த குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.6,500 முதல் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை மீண்டும் அதிகரிக்க அரசு முடிவெடுக்கலாம் என கூறப்படுகின்றது.

EPF-ESIC ஊதிய வரம்பை அதிகரிப்பதன் மூலம், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்கு அதிக பணம் பிடித்தம் செய்யப்படும். மேலும், பணியாளர்கள் தங்களது சம்பளத்தை விட அதிகமான தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்த முடியும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் பங்களிக்க வேண்டும். பணியாளர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை இபிஎஃப்-ல் பங்களிப்பது அவசியம். இபிஎஸ்ஸில் ஊழியர்கள் தங்கள் தரப்பில் இருந்து எந்தப் பங்களிப்பையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் EPS இல் அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில், நிறுவனம் அடிப்படை ஊதியத்தின் 12% தொகையில் 8.33% இபிஎஸ் (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) மற்றும் 3.67% ஊழியர்களின் EPF கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

EPF-க்கான ஊதிய வரம்பு அதிகரிப்பால், ஊழியர்களின் EPF கணக்கில் அதிக தொகை டெபாசிட் செய்யப்படும். உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 என்றால், இபிஎஃப் கணக்கில் (EPF Account) ரூ.1,800 டெபாசிட் செய்யப்படுகிறது. ஊதிய வரம்பு ரூ.30,000 ஆக உயர்ந்தால், அடிப்படை சம்பளம் ரூ.30,000 உள்ள ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் ரூ.3,600 டெபாசிட் செய்யப்படும்.

EPF-EPS இன் ஊதிய வரம்பு என்பது ஊழியர்கள் தங்கள் சார்பாக EPF-ESIC க்கு பங்களிக்க சட்டப்பூர்வமாக அவசியமான வரம்பு ஆகும். தற்போது, ​​ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் EPF-ல் இருந்து வெளியேறும் விருப்பத்தை தேர்வு செய்யலாம். ஆனால் ஊதிய வரம்பு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டால், அதிகமானோர் இபிஎஃப் வரம்புக்குள் வருவார்கள். தற்போது, ​​7 கோடி சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

நவம்பர் 30, 2024 சனிக்கிழமையன்று நடைபெற்ற EPFO ​​இன் மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. தொழிலாளர் அமைச்சகம் முதல் மத்திய அறங்காவலர் குழு (CBT) வரையிலான உறுப்பினர்கள் ஊதிய வரம்பு உயர்வுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link