பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!
பல பெண்கள் மார்பகப் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது பிற்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
மார்பகங்களில் மேல் உள்ள தோல் வித்தியாசமாகத் தோன்றினால், சிறிய புடைப்புகள் அல்லது ஆரஞ்சு தோலைப் போல் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம்.
சில சமயங்களில், அதிகமாக தாய்ப்பால் கொடுத்தாலோ அல்லது வயதின் காரணமாக மார்பில் கட்டிகள் உண்டாகலாம். அசாதாரண வடிவத்தைக் கொண்ட புதிய கட்டியை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு முலைக்காம்புகளில் இருந்து திரவம் ஏதும் வந்தால், அதுவும் ஒரு வகையான மார்பகப் புற்றுநோய் இருக்கலாம் என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம்.
பெண்கள் தங்கள் மார்பில் வலியை உணர்கிறார்கள். இது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அல்லது தசைப்பிடிப்பு ஏற்படும் போதும் வலி ஏற்படும். இதுதவிர மற்ற நேரங்களில், வலியை உணர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயைப் போலவே, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இளம் வயதிலேயே மார்பக புற்றுநோய் வந்தால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அர்த்தம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)