Health Alert: சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும் ‘சில’ காய்கறிகள்..!
)
உங்களுக்கு ஏற்கனவே கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. உண்மையில், கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் உடலில் கால்சியம்-ஆக்சலேட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீரக கல்லின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
)
கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.
)
தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. தக்காளியில் ஆக்சலேட் குறைந்த அளவில் காணப்பட்டாலும், தேவைக்கு அதிகமாக தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது 'ஹைபர்கேலீமியா' என்று அழைக்கப்படுகிறது.