தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
Side Effects Of Mouthwash: தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துவது பல பிரச்சனைகளை உண்டாக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதனால் அதனை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் மவுத்வாஷை பயன்படுத்துவது உங்கள் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். ஏனெனில் மவுத்வாஷில் ஆல்கஹால் உள்ளது. அதனால் இதை அதிகமாக பயன்படுத்தினால் வறட்சியுடன் எரிச்சல் உணர்வும் ஏற்படும்.
மவுத் வாஷ் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு இரு முறை மவுத் வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு 55% சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
மவுத்வாஷைப் தினமும் பயன்படுத்துவதால் பெரும்பாலானோர் எரிச்சல் உணர்வு மற்றும் வலி ஏற்படுவதாக கூறுகின்றனர். ஏனென்றால், சில மவுத்வாஷ்களில் அதிக அளவு ஆல்கஹால் உள்ளது. எனவே அளவோடு பயன்படுத்தும் படி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மவுத்வாஷில் உள்ள செயற்கை கூறுகள் புற்றுநோய் அப்பாயத்தை அதிரிக்கக் கூடும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினமும் அல்லது அளவிற்கு அதிகமான மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு, புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஆபத்துக்கள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
அளவிற்கு அதிகமாக மவுத்வாஷ் பயன்படுத்தினால், அதனால், பற்களில் கறை படிதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை, எனவே எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.