ஹேப்பி நியூஸ்! தை மாசம் தமிழ்நாட்டு பெண்களுக்கு கிடைக்கப்போகும் ரூ.2000 - எப்படி தெரியுமா?
இந்தியாவிலேயே வெகு சிறப்பாக தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழ்நாட்டை தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ். உங்களுக்கெல்லாம் தை மாதம் பொங்கல் பண்டிகையின்போது 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது.
எப்படி? என்றால் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை, அத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் என 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிலும், இன்னொரு ஆயிரம் ரூபாய் ரொக்கமாக ரேஷன் கடைகளிலும் நேரடியாக கொடுக்கப்படும்.
இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தீபாவளியைக் காட்டிலும் டபுள் ஜாக்பாட் கொண்டாட்டத்துடன் பெண்கள் கொண்டாடலாம். இன்னொரு குட்நியூஸ் என்றால் ஜூன் மாத்துக்கு முன்பு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது.
அதனால் அவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம். கூடவே மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பம் அரசு பரிசீலித்து ஏற்றுக் கொண்டால் புதிய விண்ணப்பதார்களும் 2 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விரைவில் இந்த திட்டத்தின் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களும் வெகு சீக்கிரமே மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக வாய்ப்பு இருக்கிறது.