2011 உலகக் கோப்பை டூ 2023 உலகக் கோப்பை - இந்த 7 வீரர்களுக்கு எண்டே கிடையாது!

Tue, 03 Oct 2023-8:27 pm,

Virat Kohli: 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனியின் கீழ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் மூத்த இந்திய வீரர் விராட் கோலி ஒரு பகுதியாக இருந்தார். 2019இல் கேப்டனாக இருந்த இவர், இந்த உலகக் கோப்பையிலும் இடம்பெற்றுள்ளார்.

 

Ravichandran Ashwin: இந்தியாவால் அறிவிக்கப்பட்ட முதற்கட்ட உலகக் கோப்பை அணியில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. இருப்பினும், அக்சர் படேலின் காயம் காரணமாக தற்போது அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாடியிருந்தார். 

Steve Smith: ஆஸ்திரேலியாவின் ரன் மெஷின் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவில் 2011 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடினார். அப்போது அவர் கீழ் ஆர்டரில் விளையாடி வந்தார். இந்த 2023 உலகக் கோப்பையில் அவர் தான் டாப் பேட்டர் ஆவார். 

 

Kane Williamson: நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், கோலி மற்றும் ஸ்மித் போன்றே 2011ஆம் ஆண்டிலேயே உலகக் கோப்பையில் விளையாடினார். தற்போது 2023இல் நியூசிலாந்தின் கேப்டனாக உள்ளார். 

Shakib Al Hasan: இவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர் வங்கதேச அணியின் கேப்டனாக உள்ளார். 

 

Mushfiqur Rahim: இவரும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடினார். இந்த உலகக் கோப்பையில் இவர் விக்கெட் கீப்பர் பேட்டராகவும், அனுபவ வீரராகவும் செயல்படுகிறார். 

Mahmudullah: ஷாகிப் அல் ஹாசன், ரஹீம் ஆகியோரை போல் இல்லாமல், இவர் 4 போட்டிகளிலேயே விளையாடினார். தற்போது இவர் உலகக் கோப்பையில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link