வைர நகைகளை யார் அணியக்கூடாது? மின்னும் வைரம் யாருக்கு தோஷமாகும்?

Fri, 18 Feb 2022-7:29 am,

மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தாலும், வைரம் அனைவருக்கும் மங்களகரமானது என்று சொல்லிவிட முடியாது. பிற ஆபரணங்களைப்போல யார் வேண்டுமானாலும் வைரத்தை அணியலாமா என்று கேட்டால் கூடாது என்பதே பதிலாக இருக்கும். யார் வைரத்தை அணியலாம், யாரெல்லாம் அணியக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் வைரத்தை அணியக்கூடாது. வைரமானது அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  நீரிழிவு நோய் அல்லது இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் வைரத்தை அணியக்கூடாது.

வைரத்துடன் பவளம்  அணிய வேண்டாம் ஜோதிட சாஸ்திரப்படி 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வைரம் அணிய வேண்டும். வைரம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது. கறை படிந்த அல்லது துண்டாக்கப்பட்ட வைரம் விபத்து அல்லது தோல்விக்கு காரணமாக இருக்கலாம். பவளத்தை வைரத்துடன் சேர்த்து அணியக்கூடாது.

வைரத்தை ஆள்காட்டி விரல் அல்லது கட்டை விரலில் அணிய வேண்டும் ஜோதிடர்களின் கூற்றுப்படி, வைரத்தை ஆள்காட்டி விரல் அல்லது கட்டைவிரலில் அணிவது சுக்கிரனை பலப்படுத்துகிறது. இதனால் நிதி பிரச்சனைகள் நீங்கும். இது தவிர, கவர்ச்சி, திரைப்படம் அல்லது ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு வைரம் பயனுள்ளதாக இருக்கும்.

யார் வைரம் அணியக்கூடாது ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வைரம் அணிவது நல்ல பலன்களை தராது. இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மறுபுறம், கடக ராசிக்காரர்கள் குறிப்பிட்ட தசாபுத்தி நடக்கும்போது வைரத்தை அணியலாம். இருந்தபோதிலும், அவரவர ஜாதகப்படி, வைரம் அணிவது பலனைக் கொடுக்கும் என்றால் அணியலாம்.

வைரம் அணிவதால் பலன் பெறும் ராசிகள் ஜோதிட சாஸ்திரத்தின் படி, ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் வைரம் மிகவும் மங்களகரமானது. இது தவிர ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வைரம் அணியக்கூடாது. ஏனென்றால், சுக்கிரன் சுகபோகத்திற்கு அதிபதி, அவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ரத்தினத்தை அணிவது ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுவதை தடுக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link