அந்தமானைப் பாருங்கள் அழகு! கடல் அலைகளுக்கு நடுவில் அழகான தீவுக்கூட்டம்
போர்ட் பிளேயருக்கு கிழக்கே 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள ரோஸ் தீவு மிகவும் பிரபலானது. இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தத் தீவுக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும், வருகைப் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் ஆகும்.
பறவைகளை விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதன் சதுப்புநிலக் காடுகளில் ஏராளமான கிளிகள் காணப்படுகின்றன.
அந்தமானில் ஸ்நோர்கெலிங்கிற்கு இது சிறந்த இடம். இங்கு உணவு, உடைகளுக்கான லாக்கர், குடிசைகள் என அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.
இந்த தீவு இந்தியாவின் சிறப்புகளில் ஒன்றாகும். இந்த பரபரப்பான உலகில் உங்களை நிம்மதியாக உணர வைக்கும் அமைதியான தீவு. இந்த தீவு விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது.
இங்கே ஸ்கூபா டைவிங் அனுபவிக்க முடியும். இயற்கையை ரசிப்பவர் மட்டுமல்ல, சாகசத்தை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடித்தமான தீவு இது...
இந்திய துணைக்கண்டத்தில் செயலில் இருக்கும் ஒரே எரிமலை இங்கு தான் இருக்கிறது. பாரன் தீவில் மக்கள் தொகை இல்லை. அதன் வடக்குப் பகுதியில் மரங்களும் செடிகளும் முளைப்பதேயில்லை என்று சொல்லலாம்.