இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம்: ராகுவின் இட மாற்றத்தால் தலைவிதி மாறும்

Thu, 03 Mar 2022-5:36 pm,

ராகு மேஷ ராசிக்கு மாறவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர, தொழில் மற்றும் வியாபாரத்திலும் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ராகு ராசி மாறும் காலத்தில் நிதி முதலீடு தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மேஷ ராசிக்காரர்கள், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.

 

ராகு இந்த ராசிக்காரர்களுக்கும் சிறிதளவு பாதிப்புகளை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணங்களால் திடீர் பண இழப்பு ஏற்படக்க்கூடும். வியாபாரத்தில் பண இழப்பும் ஏற்படலாம்.

 

ராகுவின் ராசி மாற்றம் கன்னி ராசியினரின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். இது தவிர பணப் பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. சிலரால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

 

துலா ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். கூட்டுத் தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரக்கூடும்.

ராகுவின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தவிர, இந்த காலகட்டத்தில் சமூக கௌரவத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், இந்த ராசிக்காரர்கள் அதைப் பற்றி தீவிரமாக சிந்திப்பது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link