சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கோடீஸ்வர யோகம் உண்டாகும்
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.
சனி பகவான் இப்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். மீனத்தில் சனி பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக சுப விளைவுகள் இருக்கும். இவர்களுக்கு சனி அருளால் பொற்காலம் பிறக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பொருளாதார நன்மைகளை அளிக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது இருக்கும் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நீங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனியின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். தொழில் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரும் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சனி பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.
கும்பம்: கடின உழைப்பின் பலனாக கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல வித நற்பலன்களை அள்ளித்தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் மேம்படும். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் மனம் மகிழும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள்.
சனி பகவான் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். ஏழை எளியவர்களிடம் பரிவு காட்டி அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை போன்றவற்றை அவ்வப்போது தானம் செய்து உதவுபவர்களை அவர் எப்போதும் சோதிப்பது இல்லை. நம் செயலும் எண்ணமும் சீராக இருந்தால், அவர் அருள் நமக்கு நிச்சயம் கிட்டும்.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம். இது தவிர, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.