சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், சனி அருளால் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Sat, 04 Jan 2025-11:35 am,

அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி இரவு 10.01 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி காலம் பொற்காலமாய் அமையும். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம்: மிதுன ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபம் அடைவார்கள், இதன் காரணமாக நிதி ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

கன்னி: சனி பகவான் கன்னி ராசியில் தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்கள் புதிய சொத்து, வாகனங்கள் வாங்கக்கூடும். நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

தனுசு: ஜோதிட சாஸ்திரத்தின்படி, புத்தாண்டில் சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் காரணமாக தனுசு ராசிக்கார்ரகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். உறவுகளில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

மகரம்: சனி பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். நிதி பிரச்சனைகள் தீரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.

ஏழரை சனி: சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்ய நம் நாட்டில் பல இடங்களில் சனி பகவானின் பல கோயில்கள் உள்ளன. இவற்றில் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link