குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், மே 1 முதல் பொற்காலம் ஆரம்பம்

Wed, 03 Apr 2024-12:43 pm,

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள குரு பகவான் மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இந்த பெயர்ச்சியின் காரணமாக அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். லாபம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் குரு பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். இவர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த மாற்றத்தால் பயனடைவார்கள். நீண்ட நாள் ஆசைகள் இப்போது நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய வாகனம், வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். 

கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலை நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக இருக்கும். முதலீட்டில் லாபம் கூடும். காவல்துறை, நிர்வாகம் மற்றும் ராணுவத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஆதாயமடைவார்கள். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரமாக இருக்கும். 

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link