பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.... மகிழ்ச்சி, செல்வம், வெற்றி, அனைத்தும் பொங்கும்!!
சூரியன் மகர ராசியில் நுழைந்து சூரியன் பெயர்ச்சி நடக்கும் நாளில் மகர சங்கராந்தி (Makar Sankaranthi) என்றழைக்கப்படும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழா (Pongal) கொண்டாடப்படவுள்ளது. சூரியன் பெயர்ச்சிக்கு பின் பொங்கல் பண்டிகைக்கு பிறகான காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மகர ராசியில் சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய ஆற்றலையும் நேர்மறை விளைவுகளையும் கொண்டுவரும். இந்த நேரத்தில், மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் அதிக அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். பணியிடத்தில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வீர்கள். மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பு, படைப்பாற்றலுக்கான புதிய அடையாளம் மற்றும் நிதி நன்மைகளை வழங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கடகம்: பொங்கல் ராசிபலன் கணிப்பில் கடக ராசிக்காரர்காளுக்கு சாதகமான செய்திகள் உள்ளன. சூரியன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். வணிகத்தில் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு மூலம் முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆர்ரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கன்னி: மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் சில பகுதிகளில் முன்பு இருந்திராத அளவு வெற்றியைக் கொண்டு வரும். இந்த நேரத்தில், மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உறவை வலுப்படுத்த துணைவர் தனது செல்வாக்கைக் காட்டுவார். வீட்டில் குழந்தைகளின் சாதனைகள் உங்களைப் பெருமைப்படுத்தும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு: பொங்கலுக்கு பின் தனுசு ராசிக்காரர்கள் அபாரமான வெற்றிகளை குவிப்பார்கள். மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். அடுத்த ஒரு மாதத்திற்கு, தனுசு ராசிக்காரர்களின் பேச்சில் சிறிது கடுமையும், ஆக்ரோஷமும் இருக்கலாம். இருப்பினும், குடும்ப வாழ்க்கை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பல கடினமாக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்: மகரம் சனியின் ராசி, சனி சூரியனின் மகன். மகர ராசியில் சூரியனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மகர ராசிக்காரர்களுக்கு மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசாங்க பணிகள் சிக்கலின்றி நடந்து முடியும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் பொங்கலுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். அடுத்த ஒரு மாதத்திற்கு, கும்ப ராசிக்காரர்கள் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் புகழ் பெறுவார்கள். செலவுகள் அதிகரிக்கக்கூடும். ஆனால், இந்தச் செலவு உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்காக இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பல வித நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில், உங்கள் வருமானமும் லாபமும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த முறை மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். அது புதிய வாய்ப்புகளைத் தரும். நீங்கள் தீட்டும் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறும். மேலும் சமூகத்தில் உங்கள் நற்பெயரும் அதிகரிக்கும்.
சூரிய பகவானின் அருள் பெற தினமும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம். இதி தவிர, 'ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்' என்ற சூரிய காயத்ரியை காலையில் சொல்வதும் நல்லது.
பொறுப்பு தூறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.