சூரியன் ராசி மாற்றம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும்

Fri, 19 Aug 2022-4:44 pm,

சிம்மம்: ஜோதிடத்தின் படி, சிம்மம் என்பது சூரியனின் சொந்த ராசியாகும். சூரியப் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் போது எந்த வேலையையும் மிகுந்த ஆற்றலுடன் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உற்சாகம் இருக்கும். பதவி உயர்வுடன் வருமானமும் கூடும். இதனுடன் உத்தியோகத்தில் இடமாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள்.

 

கன்னி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியனின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழை பொழியும். உங்கள் கடின உழைப்பால் அதிக வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தில் எந்த சுப காரியமும் நடைபெறும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். வாகன இன்பத்தைப் பெறலாம். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் கூடும். புதிய வாகனம் அல்லது பிளாட் வாங்கும் திட்டம் வெற்றியடையும். இதன் போது தந்தையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமும் உண்டாகும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் சூரியன் பெயர்ச்சி காலத்தில் கடின உழைப்பின் வழிபாட்டின் பலன்களைப் பெறலாம். இதனுடன் மன மகிழ்ச்சியும் இக்காலத்தில் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அனுகூலத்தைப் பெறுவீர்கள். பணியிடத்திலும் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

மீனம்: சூரியன் சஞ்சரிம் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் தந்தை அல்லது மூத்த சகோதரரின் ஆதரவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சி அடையலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link