சுக்கிரன் அருளால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பண வரவு அதிகரிக்கும்!!

Wed, 24 Aug 2022-5:27 pm,
Taurus

கடக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் வாகனங்கள், சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பொறாமை கொண்ட நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

 

Virgo

கடக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது கன்னி ராசியினருக்கு நல்ல காலத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு இது அனைத்து வகையிலும் பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். 

Leo

கடகத்தில் உள்ள சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இதற்குப் பிறகு செலவும் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். ஆகையால், புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுவது நல்லது. நண்பர் அல்லது அன்புக்குரியவரிடமிருந்து நல்ல செய்தி வரும். சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனினும், நீங்கள் இந்த சமயத்தில் எடுக்கும் முடிவுகளால் எதிர்காலத்தில் பல பலன்களை பெறலாம். அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link