சனி பகவானின் ஃபேவரெட் ராசிகள் இவை தான்.. எப்போதும் கொண்டாட்டம்
சனி பகவானுக்கு பிடித்தமான ராசிகள்: சனி பகவானுக்கு பிடித்தமான அந்த அதிர்ஷ்டக்கார 5 ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசி: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் சனியின் நண்பன். ஆகையால் சனி பகவான் இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. அதேபோல் எனவே ரிஷப ராசியிக்கு சனி பகவான் நட்பாக இருக்கின்ற காரணத்தினால், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற காலங்களில் இந்த ராசியினருக்கு அதிக பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கிறார்.
கடக ராசி: கடக ராசி என்பது சந்திர பகவானுக்குரிய ராசியாகும். ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சந்திர பகவானை எதிரியாக கருதுகின்ற கிரகங்கள் இருக்கின்றனரே தவிர, சந்திர பகவான் எந்த கிரகத்தையும் எதிரியாக கருதுவதில்லை. சனிபகவான் இந்த ராசியினரை தங்களின் சொந்த உழைப்பினால் மேன்மையான வாழ்க்கையை வாழ செய்கிறார்.
துலாம் ராசி: சனிபகவானுக்கு பிடித்தமான ராசிகளில் துலாம் ராசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்களுக்கு சனி பகவான் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் தருகிறார். துலாம் ராசிக்காரர்கள் சனியின் அருளால் வாழ்வில் உயர் நிலையை அடைவார்கள். வெற்றி அவர்களின் பாதங்களை முத்தமிடும்.
மகர ராசி: சனி பகவான் இரண்டு ராசிகளுக்கு உரிமையாளராக இருக்கிறார். அதில் முதல் ராசி மகரம் மற்றும் இரண்டாவது கும்பம். அதன்படி மகர ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் எப்போதும் கிடைக்கும். தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். அவர்களின் கனவுகள் அனைத்தும் நனவாகும்.
கும்ப ராசி: சனிக்கு பிடித்த ராசிகளிலும் கும்பமும் உண்டு. இதற்குக் காரணம் கும்பம் சனியின் சொந்த ராசியாகும். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். கடின உழைப்பின் மூலப் பலனையும் பெறுவார்கள். அதேபோல் இவர்களுக்கு நினைத்து நேரத்தில் பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.