Ferrari 296 GT3: ஃபெராரி ரேஸ் காரின் சூப்பர் தோற்றம்: விலை என்ன?
இந்த ரேஸ் காரின் முன்புறத்தில் தெளிவான ஸ்ப்ளிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது, பம்பரின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பெரிய கேனர்டுகள் மற்றும் பானட்டின் இருபுறமும் பல காற்று துவாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 296 GT3 ஸ்டாண்டர்ட் காரை விட பெரிய வீல்பேஸைக் கொண்டுள்ளது. மற்ற வடிவமைப்பு கூறுகளில் பெரிய பின்புற இறக்கை மற்றும் டிஃப்பியூசர் ஆகியவை அடங்கும். கார் 1,250 கிலோ எடை கொண்டது.
ஃபெராரி 296 ஜிடி3 ரேஸ் காரின் உட்புறத்தில், ரோல் கேஜ் மற்றும் கார்பன் ஃபைபர் இருக்கைகளுடன் FIA-அங்கீகரிக்கப்பட்ட ஒற்றை இருக்கை காக்பிட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 296 GT3 இல் ரேஸ்-ஸ்பெக் ஸ்டீயரிங் வீல், சரிசெய்யக்கூடிய பெடல்கள், ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றை கொண்டுள்ள்து.
பெடல் பாக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் டெலிமெட்ரிக்கான இரண்டு-திரை அமைப்பு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் பல சுவிட்சுகள் அழகாய் அமைந்துள்ளன. ஜிடி ரேசிங்கின் கடுமையான பாதுகாப்பு தரங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரேஸ் காரில் 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 602 ஹெச்பி பவரையும், 709 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நிறுவனம் ஃபெராரி 296 ஜிடி3 விலையை வெளியிடவில்லை. பல்வேறு ஆன்-ட்ராக் மோட்டார்ஸ்போர்ட் திட்டங்கள் வெளிவரவிருக்கும் நிலையில், அவை வெளியாகும்வரை நிறுவனம் இந்த ரேஸ் காரின் விலையை வெளியிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.