சேப்பாக்கத்தில் அந்த விஷயத்தை மறக்கமாட்டேன்; பிளம்மிங் உருக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ஸ்டீபன் பிளம்மிங்.
ஐபில் தொடங்கியபோது சென்னை அணிக்காக விளையாடிய அவர், பின்னர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்த்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட்டபோது ஏறத்தாழ 20 ஆயிரம் ரசிகர்கள் வந்து ஆரவாரம் எழுப்பியுள்ளனர்.
இந்த விஷயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொள்ள முடிந்தது என பிளம்மிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை தன் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.