விமானப் பாதுகாப்பு விதிகள்: எச்சரிக்கை! ‘இதை’ சொன்னால், விமான பயணத்திற்கு நிரந்திர தடை

Sat, 30 Oct 2021-5:14 pm,

விமானப் பாதுகாப்பு விதிகளின்படி, விமான பயணத்தில் சில நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகள் மிகவும் தீவிரமாகக் கருதப்படுகின்றன. சில வார்த்தைகளை விமான ஊழியர்களிடம் கேலியாகச் சொன்னால் கூட, நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் (விமானப் பாதுகாப்பு விதிகள்) மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதனுடன், நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய நிரந்திர தடை விதிக்கப்படலாம்.

விமானப் பணிப்பெண்ணிடம் மதுபானம் (ஆல்கஹால்) வழங்குமாறு கேட்டு விமானத்தில் குடிக்கலாம். ஆனால் அதை விமானத்தில் ஏறும் முன்பே, மது பானம் அருந்தி விட்டு விமானத்தில் ஏற முடியாது. ஏர்லைன்ஸ் அட்டெண்டரிடம் 'நான் குடிச்சிருக்கேன்' என்று கேலியாகச் சொன்னாலும் உங்களுக்குப் பிரச்சனை வரலாம். குடிபோதையில் பயணிப்பவர்கள் மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுவதே இதற்குக் காரணம்.

இதுபோன்ற குடிபோதையில் பயணிப்பதைத் தடுக்க அனைத்து விமான நிறுவனங்களாலும் கேபின் குழுவினர் மற்றும் விமானப் பணிப்பெண்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. போதையில் இருக்கும் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்காமல் தடுத்து திருப்பி அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட பிறகு, ஒரு பயணி மது அருந்தி விட்டு மயக்கமாக  இருப்பதை அவர்கள் அறிந்தால், அத்தகைய பயணியை அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கி, பயணிகளை விமானத்திலிருந்து இறக்கிவிடலாம்.

அதுமட்டுமின்றி, குடிபோதையில் பயணித்த பயணி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ, தகராறில் ஈடுபட்டாலோ, அவர் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 8,000 பவுண்டுகள் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதனுடன், அந்த பயணியை விமானத்தில் பயணம் செய்ய  நிரந்திர தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்கலாம்.

விமானத்தில் அமர்ந்திருக்கும் போது, 'நான் குடிபோதையில் இருக்கிறேன்' அல்லது 'நான் குடித்துள்ளேன்' என்று நகைச்சுவையாக கூட சொல்லாதீர்கள். விமான ஊழியர்கள் உங்கள் நகைச்சுவையை சீரியஸாக எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள விமான நிலையத்தில் உங்களை இறக்கிவிட்டு மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link