Flipkart சலுகை விற்பனை; சிறந்த ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்க வாய்ப்பு!

Sun, 18 Sep 2022-5:47 pm,

Xiaomi 11i 5G: இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999. ஆனால், இதன் சலுகை விலை ரூ. 24,999. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மேலும் ரூ.1,250 சேமிக்கலாம். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் வழங்குவதன் மூலம் 22 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இதன் மூலம் இந்த போனை ரூ.1,749க்கு வாங்கலாம்.

Vivo V21 5G: Vivo வழங்கும் இந்த 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,990ல் இருந்து ரூ.27,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பழைய போனுக்கு ஈடாக வாங்கும் போது, ​​19 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும், இந்த சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட பிறகு, இந்த போனின் விலை ரூ.2,990 ஆக இருக்கும்.  

Samsung Galaxy S22 Plus 5G: இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 128GB மாடல் ரூ.1,01,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் விற்பனையில் ரூ.69,999க்கு விற்கப்படுகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மேலும் ரூ. 3,500 தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ. 19,000 சேமிக்க முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த போனை ரூ.47,499க்கு எடுக்கலாம்.

Poco X4 Pro 5G: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த 5ஜி போன் ரூ.23,999 என நிர்ணயிக்கப்ப்ட்டுள்ள நிலையில், இது ரூ.16,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆபரில் இந்த போனை வாங்கினால் ரூ.15,920 வரை சேமிக்கலாம்.  இதன் மூலம் ரூ.579க்கு POCO போனை வாங்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link