பஸ் டிக்கெட் விலையில் சென்னைக்கு விமானத்தில் பறக்கலாம் - முழு விவரம்
மிக குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கும் வகையில், டாடா குழுமம் விமான டிக்கெட் சலுகை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Limited Time Flash Sale என வெளியிடப்பட்டிருக்கும் இந்த சலுகையில் எக்ஸ்பிரஸ் லைட் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ரூ. 932 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த விமான டிக்கெட் விற்பனை சலுகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான பயண திட்டத்துக்கு இந்த சலுகை பொருந்தும். அதாவது மார்ச் 31, 2025 தேதி வரை நீங்கள் உங்கள் பயணத்தை திட்டமிட்டு இந்த டிக்கெட் சலுகையை உபயோகித்துக் கொள்ளலாம்.
Airindiaexpress.com, மொபைல் ஆப்ஸ் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். எந்தவித வசதிக் கட்டணமும் இல்லை
அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட் விலை ரூ.1088 முதல் முன்பதிவு செய்யலாம். டெல்லி-குவாலியர், கொச்சி-பெங்களூரு, பெங்களூர்-சென்னை வழித்தடங்களில் இந்த சலுகை பொருந்தும்.
இதுதவிர, இண்டிகோ, விஸ்தாரா, ஸ்டார் ஏர், ஆகாஷா போன்ற நிறுவனங்களும் குறைந்த செல்வதற்கான சலுகை விலை விமான டிக்கெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.