மக்கள் முன்னெச்சரிக்கையாக மழைக் காலங்களில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை !
மழைக்காலங்களில் வெளியில் செல்வோர் கட்டாயம் குடை வைத்திருக்க வேண்டும்.வீட்டில் மின் தடை ஏற்படும் நேரத்தில் மெழுகுவர்த்தி, டார்ச் இரண்டும் முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் மக்கள் அனைவரும் அடிப்படையாகக் கட்டாயம் மழைக்காலங்களில் வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலங்களில் முதலுதவியாக வீட்டில் தேவையான மருந்து,மாத்திரை, உணவுப் பொருட்கள் முன்னெச்சரிக்கையாக வாங்கி வைக்க வேண்டும்.கட்டாயம் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களைப் பாதுகாக்கும் விதமாகக் கம்பளி போன்ற உரைகள் அணிந்திருக்க வேண்டும்.
மழைக்காலங்களில் வீட்டில் இருப்பது பாதுகாப்பை உறுதி செய்யும்.தேவையற்ற இடங்களுக்கு மழைக்காலத்தில் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையாக வீட்டில் சில இடங்களில் தண்ணீர் தேங்கும் இடம் அல்லது வீட்டின் மேற்கூரையில் சேதம் இருந்தால் உடனே மழைக்கு முன் சரி செய்து விடுவது நல்லது.
இடி,மின்னல்,புயல் ஏற்படும் நேரங்களில் வீட்டின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் மூடிவிடுவது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
மழைக்காலத்தில் மின்கம்பம் இருக்கும் இடங்களுக்கு செல்லக்கூடாது.ஈரமான இடத்தில் மின் பொத்தானை அழுத்தவோ அல்லது தொடவோக் கூடாது.மேலும் குழந்தைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்தில் கட்டக் கூடாது.
இடி,மின்னலுடன் கூடிய கனமழை நேரத்தில் வெளியில் சென்று வீடியோ எடுப்பது,செல்வி எடுப்பது ஆபத்தான முறையில் பயணம் செல்வது போன்ற செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.