50 வயதிலும் நீளமான கூந்தல் வேண்டுமா? இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்
அடர்த்தியான, மென்மையான கூந்தல் வேண்டுமானால், வாரம் இருமுறை எண்ணெய் மசாஜ் செய்யவும். ஹேர் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க, வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக அவகேடோ ஹேர் மாஸ்க் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
முடி வளர்ச்சிக்கு உணவு முறை சரியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை சாப்பிட முயற்சியுங்கள். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம். எனவே, முடிந்த வரை மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சியுங்கள். மன அழுத்தத்திருந்து விடுப்பட யோகா, தியானம் போன்றவற்றை செய்யவும்.
50 வயதை கடந்த பிறகு முடி பராமரிப்பு மிகவும் அவசியம். இதற்கு சரியான கெமிக்கல் இல்லாத ஷாம்பு, எண்ணெய், சீப்பு போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.