பங்குச் சந்தையில் ஆயிரத்தை கோடிகளாக்க ‘சில’ டிப்ஸ்!

Wed, 19 Apr 2023-11:13 pm,

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தை தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றிய பலர் ஆயிரங்களை கோடிகளாக்கி பணக்காரர்கள் ஆகி வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை குவித்துள்ளனர். அதை பின் பற்றுதன் மூலம் சாதாரண முதலீட்டாளரும் ஒரு மில்லியனராக மாறலாம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டு டிப்ஸ் பற்றி அறிந்து கொள்ளலாம்.

எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தில் எவ்வளவு கடன் இருக்கிறது என்று  தெரிந்துகொள்ளுங்கள். கடன் குறைவாக இருந்தால், நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. ஆனால், கடன் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் மதிப்பீடு எந்த நேரத்திலும் குறையும் வாய்ப்பு உள்ளது.

பங்கு சந்தையில் தொடர்ந்து நீடித்து இருக்க  விரும்பினால், நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதை விட, முதலீடு பன்மடங்கு வளர கால அவகாசம் கொடுக்க வேண்டும். சந்தையில் கொஞ்சம் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

நிறுவனத்தின் பங்குகளின் விலையைப் பார்த்து முதலீடு செய்ய கூடாது. அதிக விலையுள்ள பங்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பது அவசியமில்லை. நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் மதிப்பு மற்றும் செயல் திறனை பார்க்கவும், அதன் பங்கு விலையை அல்ல. பெரும்பாலானோர் அதிக விலையுள்ள பங்குகளை வாங்கி தவறு செய்கிறார்கள். இதை ஒருபோதும் செய்யக்கூடாது.

காற்று வீசும் திசைக்கு எதிராக செல்வது பலன் அளிக்கும். பெரும்பாலானோர் பங்குகளை விற்கும் போது வாங்குங்கள், பிறர் வாங்கும் போது விற்றுவிடுங்கள் என்று சொல்லுவார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது, மற்றவர்களைப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கூடாது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் வருமானம் அதிக அளவில் இருக்கும். அதேசமயம்ஆபத்தும் அதிகம். எனவே, மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாமல், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன் பிறகே முதலீடு செய்ய வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link