‘இப்படி’ வாக்கிங் செய்து பாருங்கள்! சுகர் லெவல் சர்ரென இறங்கும்!
சர்க்கரை நோயினால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், டைப் 2 டயபிட்டீஸ் எனப்படும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெல்தியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். மேலும், சில உடற்பயிற்சி நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
டைப் 2 நீரிழிவு நோயை சமாளிப்பது கடினம் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள், கண்டிப்பாக டயட்டில் இருப்பதும் வாழ்வியல் மாற்றங்கள் மேற்கொள்வதும் இன்றியமையாததாகிறது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வாக்கிங் பயிற்சி மேற்கொள்பவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளாதவர்களை விட ஹெல்தியாக உள்ளனர்.
நீரிழிவு நோயை குணப்படுத்த வேகமாக உடற்பயிற்சி செய்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 1 கி.மீ நடப்பவர்களுக்கு 9சதவிகிதம் நீரிழிவு நோய் குறைவதாக கூறப்படுகிறது.
3-5 கிலோ மீட்டர் வேகத்தில் வாக்கிங் செய்பவர்களுக்கு நீரிழிவு நோய் 15 சதவிகிதம் குறைவாக பாதிக்கிறதாம்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் அவர்களுக்கு ஏற்ற வேகத்தில் வாக்கிங் பயிற்சி மேற்கொள்வது நல்லது.