பாலை விட அதிகம் கால்சியம் உள்ள ‘சூப்பர்’ உணவுகள்!
கால்சியம் நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமானது. இது தவிர, கால்சியம் நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது நமது உடலின் வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பாலை விட, கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்களுக்கு கால்சியத்தை வழங்க டோஃபு ஒரு நல்ல உணவாக இருக்கும். டோஃபு சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதில் இருந்து சோயா பால் மற்றும் பல சோயா பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கால்சியம் குறைபாட்டை சமாளிக்க டோஃபு சிறந்த வழி.
நீங்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரத்தை தேடுகிறீர்களானால், மத்தி மீன் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் அதை உட்கொண்டால், உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு விரைவாக ஈடுசெய்யப்படுகிறது. நீங்கள் 100 கிராம் மத்தி மீன்களை உட்கொண்டால், நீங்கள் 325 mg கால்சியம் வரை பெறலாம்.
பாதாம், ஆளி விதைகள் போன்றவை கால்சியம் மிகுதியாகக் காணப்படும் உலர் பழங்களில் சில. அவற்றின் வழக்கமான நுகர்வு மூலம், உங்கள் உடலில் கால்சியம் மிக விரைவாக சேருகிறது. மேலும் இதிலுள்ள அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பல வகைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
நல்ல அளவு கால்சியம் உள்ள காய்கறிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், ப்ரோக்கோலி உங்கள் தேடலை நிறைவேற்றும். ஆம், இந்த பச்சை நிற காய்கறியில் கால்சியம் நிறைந்துள்ளது. இருப்பினும், ப்ரோக்கோலியை உட்கொள்ளும் போது, அதை அளவிற்கு அதிகமாக சமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அதன் சத்துக்களை குறைக்கிறது.
வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும் கால்சியம் அதிகம் உள்ளது. தினமும் 2-4 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால், பாலை தவிர்த்தாலும் கால்ஷியம் குறைபாடு ஏற்படாது. 100 கிராம் எள்ளில் 1400 மி.கி கால்சியம் இருப்பதால் எள்ளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகின்றது.
கால்ஷியம் குறைபாடு காரணமாக எலும்புகள் வலுவை இழந்தால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்பது என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆக்கும் ஒரு வித நோய் ஆகும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.