Serotonin: மன அழுத்தத்தை விரட்ட உதவும்... ஹேப்பி ஹார்மோன் நிறைந்த சில உணவுகள்
செரடோனின் ஹார்மோன்: நமது மனநிலையை தீர்மானிப்பதில் செரடோனின் என்னும் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது அறிவு திறன், தூக்கம், பசி என அனைத்தையும் செரடோனின் என்னும் ஹார்மோன் தான் தீர்மானிக்கிறது.
செரடோனின் ஹார்மோனை தூண்டும் உணவுகள்: நமது மனதில் உள்ள பதற்றமும் அழுத்தமும் தூர விலகவும், மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கவும் செரடோனின் ஹார்மோனை அதிகரிக்க உதவும், ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
வாழைப்பழம்: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழும் வாழைப்பழம் ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சிறந்த பழம். இது எல்லா காலங்களில் கிடைக்கக் கூடியது. அதோடு, எளிதில் ஜீரணிக்க கூடிய பழம். வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கிறது.
அன்னாசிப்பழம்: மனதிற்கு சந்தோஷ உணர்வை கொடுக்கக்கூடிய பழங்களில் அன்னாசி பழத்தில் வைட்டமின் சி யும் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவாகிறது. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது.
பசுவின் பால்: செரடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் ட்ரொப்டோன் என்னும் அமினோ அமிலம் சுத்தமான பசுவின் பாலில் நிறைந்துள்ளது. இது மனநிலையை மேம்படுத்தி, நல்ல தூக்கத்தை கொடுத்து, உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இரவில் தூங்குவதற்கு முன்னால் பசுவின் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
சோயா உணவுகள்: புரதச்சத்து நிறைந்த சோயா உணவுகளிலும் ட்ரிப்டோன் அதிகம் உள்ளது. எனவே மனம் மகிழ்ச்சியாக இருக்க, சோயா பால், சோயா பன்னீர் போன்ற உணவுகளை டயட்டில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் பருப்பு: புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம் பருப்பு, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த உணவு. இதில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. மூளைக்கு ஆற்றலை அள்ளி வழங்கக் கூடியது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.