Summer Tips: கடும் கோடையிலும்... உடல் கூலாக இருக்க..!
சுட்டெரிக்கும் வெயிலில், உடலை பாதுகாத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவை உண்பது பலன் தரும். அந்த வகையில், கடும் கோடையில், உடலை குளிர்ச்சியாக வைக்க, எந்த வகையான உணவுகள் உதவும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதினா உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை மோரில் சேர்த்து குடிக்கலாம். அல்லது புதினா சாறு கலந்த தண்ணீரை குடிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதோடு, செரிமான பிரச்சனைகளையும் இது நீக்கும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. எனவே உடல குளிர்ச்சியாக இருக்கும்,
வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, உடலுக்கு நீர்ச்சத்தை கொடுத்து, கடும் கோடையினால் ஏற்படும் உடல்நல பாதிப்பை தடுக்கிறது.
தர்பூசணி கடும் கோடைக்கு ஏற்ற மிகச் சிறந்த உணவு. இதனை உண்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த காய்கறிகளில் வெள்ளரியும் ஒன்று. இதனை சாலட் வடிவிலும், ஜூஸ் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.