யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க
பல நேரங்களில், தவறான உணவுப் பழக்கத்தால், இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக, கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்கள் குறைந்த பியூரின் உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிக யூரிக் அமில அளவு மற்றும் கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அஸ்பாரகஸ், கீரை, காலிஃபிளவர், காளான்கள், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளில் இறைச்சியைப் போல அதிக பியூரின் இல்லை என்றாலும், உடலில் கீல்வாத வலியைத் தூண்டும் அளவுக்கு இவற்றில் பியூரின் உள்ளது. ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பெரும்பாலான சிவப்பு இறைச்சி, உறுப்பு இறைச்சி, மத்தி, நெத்திலி, கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகளில் பியூரின்கள் அதிகம் இருப்பதால் யூரிக் அமில நோயாளிகள் இவற்றை தவிர்க்கலாம். இவற்றை உண்ண வேண்டுமானால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
இனிப்பு பானங்களில் ஃப்ருக்டோஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக இவற்றில் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் உள்ளது. இது கீல்வாதத்திற்கான ஆபத்து காரணியாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், சர்க்கரை பானங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.
பெரும்பாலான பழங்களிலும் அதிக அளவு ஃப்ருக்டோஸ் உள்ளது. எனினும், பழங்களில் இருந்து நுண்ணூட்டச் சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்து ஒட்டுமொத்த பிரக்டோஸ் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த இவற்றை மிதமாக உட்கொள்வது நல்லது.
மதுபானத்தில் அதிக அளவு பியூரின் உள்ளது. அடிக்கடி மது அருந்துபவர்களுக்கு யூரிக் அமில அளவு அதிகரிப்பது உறுதி. இதனுடன் யூரிக் அமிலத்துடன் தொடர்புடைய அறிகுறிகளும் அதிகரிக்கும். ஆகையால் முடிந்தவரை மதுபானத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.