இன்பமான பாலியல் வாழ்வுக்கு... இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம் மக்களே - என்னென்ன தெரியுமா?

Tue, 10 Dec 2024-3:37 pm,

ஒருவர் உடல் ஆரோக்கியம் (Body Health) மற்றும் மன ஆரோக்கியத்துடன் (Mental Health) இருக்க வேண்டும் என்றால் அவரின் பாலியல் செயல்பாடும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், பொதுமக்கள் இதனை அதிகம் புறக்கணிக்கிறார்கள். 

 

மோசமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றால் பாலியல் சார்ந்த ஆரோக்கியம் (Sexual Health) கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உடல் நலமும் பாதிக்கப்படும். 

 

ஆண்டிஆக்ஸிடன்டான வைடட்மிண் E (Vitamin E) ஆரோக்கியமான சருமத்திற்கும், பாலியல் செயல்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும். காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றில் வைட்டமிண் E நிறைந்திருக்கின்றன. 

 

அந்த வகையில், பாலியல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு Ninacin எனும் வைட்டமிண் B3 (Vitamin B3) மிக முக்கியமாகும். எனவே, வைட்டமிண் B3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சிக்கனின் நெஞ்சுப்பகுதி, இறைச்சிகளில் ஈரல், வேர்க்கடலை, அவகாடோ, காளான்கள், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றில் வைட்டமிண் B3 இருக்கின்றன.

 

பாலியல் ஆரோக்கியத்தை வலுவாக்க வைட்டமிண் D (Vitamin D) வழிவகை செய்யும். மேலும், வைட்டமிண் D நிறைந்த உணவுகளான கடல் மீன்கள், முட்டை ஆகியவைற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் பாலியல் ஆரோக்கியம் பலமாகும்.

 

துத்தநாகம் (Zinc) உடலின் செரிமானம் மற்றும் வளர்சிதை  மாற்றத்திற்கும் நன்மை பயக்கும். மேலும், துத்தநாகம் உடலில், ஆண்களுக்கு பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தூண்டும். எனவே, துத்தநாகம் நிறைந்த உணவுகளான நத்தை, சீஸ், பட்டணி, பருப்பு வகைகள், வேர்க்கடலை, ஸ்வீட்கார்ன், மாதுளை, முந்திரி உள்ளிட்டவைற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

 

L-Arginine எனும் அமினோ அமிலம் உடலுக்கு தேவையாகும். இது உடலில் புரதம் உருவாக வழிவகிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த ஓட்டம் அதிகம் இருந்தால்தான் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வராது. நட்ஸ், விதைகள், பால் பொருள்கள், சோயபீன்ஸ், முழு தானியங்கள், மீன், இறைச்சிகள் ஆகியவற்றில் இது அதிகம் இருக்கிறது. 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான ஊடக அறிக்கைகள் மற்றும் தகவல்கள் மூலம் எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் உரிய மருத்துவர் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link