ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் யூடிலிட்டி வாகனம் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்கள்.
இந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்கள் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என 4 வித மாடல்களில் கிடைக்கிறது.
செயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஆம்பியன்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.09 லட்சம், டீசல் வேரியன்ட் விலை ரூ.6.09 லட்சம், ஃப்ரீஸ்டைல் டிரென்ட் பெட்ரோல் விலை ரூ.5.99 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.6.99 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.39 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.35 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.94 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.89 லட்சம் ஆகும்.
இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.