ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்த வெளிநாட்டு கேப்டன்கள் - பட்டியல் இதோ!

Sat, 25 May 2024-10:50 pm,

பாட் கம்மின்ஸ்: சமீப கால கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் பாட் கம்மின்ஸ் இந்தாண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை இறுதிப்போட்டி வரை வர வைத்துள்ளார். WTC கோப்பை, ஆஷஸ் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை (ODI) என தொடர்ந்து வெற்றியை சுவைத்து வரும் பாட் கம்மின்ஸ் தற்போது ஐபிஎல் கோப்பையை நெருங்கிவிட்டார் எனலாம். 

 

இயான் மார்கன்: இங்கிலாந்து ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தாகத்தை தணித்த இவர், கேகேஆர் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் கேப்டனாகவும் செயல்பட்டு, 2021ஆம் ஆண்டில் கடுமையான வீழ்ச்சியில் இருந்து இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார். இருப்பினும் அவரால் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற இயலவில்லை. 2014ஆம் ஆண்டுக்கு பின் இவரின் தலைமையில்தான் கேகேஆர் இறுதிப்போட்டிக்கே வந்தது. 

 

கேன் வில்லியம்சன்: 2108ஆம் ஆண்டில் கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டி வரை தகுதிபெற்றது. இருப்பினும், சென்னையிடம் இறுதிப்போட்டியில் படுதோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது. 

 

ஸ்டீவன் ஸ்மித்: 2017இல் புனே அணியில் தோனியின் கேப்டன்ஸி ஸ்மித்திற்கு கைமாற்றப்பட்டது. இறுதிப்போட்டி வரை ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வந்தாலும் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. 

 

டேவிட் வார்னர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2016ஆம் ஆண்டில் இவர் கோப்பையை வென்று கொடுத்தார். ஆர்சிபி அணியை எஸ்ஆர்ஹெச் இறுதிப்போட்டியில் வீழ்த்தியது. 

 

ஜார்ஜ் பெய்லி: பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ஆம் ஆண்டில் வேறு ஒரு ரூபத்தில் இருந்தது. அந்த அணி அப்போது இவரை தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஒரு பலமான அணியாக காட்சியளித்த நிலையில், கேகேஆர் அணி பஞ்சாபை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. 

 

டேனியல் வெட்டோரி: தற்போது எஸ்ஆர்ஹெச் அணியின் பயிற்சியாளரான இவர் 2012ஆம் ஆண்டில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தார். இருப்பினும் அந்த தொடரை சிஎஸ்கே கைப்பற்றியது. 

 

கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி 2009ஆம் ஆண்டில் கோப்பையை வென்று கொடுத்தவர் இவர். 

 

ஷேன் வார்னே: முதல் ஐபிஎல் தொடரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து கோப்பையை வென்று கொடுத்தவர் வார்னே.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link